தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.88  குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகியின் “இகோ ஸ்மைல்ஸ்’ லிமிடெட் எடிஷன் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
14:27

மாருதி சுசூகி கார் நிறுவனம், ஏற்கனவே, "இகோ' என்ற பெயரில், வேன் விற்பனை செய்து வருகிறது. இந்த வேன், ஐந்து இருக்கைகள், ஏழு இருக்கைகள் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கும். அதே போல, பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., வசதியிலும் கிடைக்கும். ஆம்புலன்ஸ் வாகனமாகவும், "இகோ' வேன் கிடைக்கிறது. சி.என்.ஜி., வசதி கொண்ட "இகோ' வேன், டாக்ஸி நிறுவனங்களிடம், மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வாகனத்தில், பவர் ஸ்டியரிங், "ஏசி' வசதி, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பெட்ரோலில் இயங்கும், "இகோ' வேன், ஒரு லிட்டருக்கு 14 கி.மீ., மைலேஜும், சி.என்.ஜி.,யில் இயங்கும், "இகோ' வேன், 20 கி.மீ., மைலேஜும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெட்ரோலில் இயங்கும், வாகனத்தின் விலை, ரூபாய் 3.05 லட்சம்(எக்ஸ்ஷோரூம், டில்லி), சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனத்தின் விலை, ரூபாய் 3.22 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஏழு புது அம்சங்கள் இடம் பெற்ற, "இகோ' வேனின், லிமிடெட் எடிஷனை, மாருதி சுசூகி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் விலை, ரூபாய் 3.32 லட்சம்(எக்ஸ்ஷோரூம், டில்லி) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி., கனெக்டிவிட்டியுடன் கூடிய டபுள் டின் ஸ்டிரியோ வசதி, 15 அங்குல ஸ்பீக்கர்கள், "வீல் கேப்'கள், டபுள் டோன் சீட் கவர்கள், ஃப்ளோர் மேட்கள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய வாகனத்துக்கு, "இகோ ஸ்மைல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)