பதிவு செய்த நாள்
29 ஏப்2013
00:42

கடலூர்:கடும் வறட்சி காரணமாக, தமிழகத்தில் கரும்பு விளைச்சல் சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்., - செப்.,) தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி, குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நடப்பு ஏப்ரல், 15ம் தேதி நிலவரப்படி, தமிழக சர்க்கரை ஆலைகள், 2.30 கோடி டன் அளவிற்கு, கரும்பு அரவை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரும்பு அரவை, 2.15 கோடி டன் அளவிற்கே இருக்கும் என, தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலத்தில் சர்க்கரை உற்பத்தி, மதிப்பிடப்பட்டதை விட, 2.50 லட்சம் டன் குறைந்து, 22 லட்சம் டன்னில் இருந்து, 19.5 லட்சம் டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வறட்சி காரணமாக, கரும்பு விவசாயிகள், கரும்பு பயிரிடும் பரப்பளவை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். வறட்சி தொடர்ந்து நீடித்தால், அவர்கள் மாற்றுப் பயிரை நாடுவர் என, தெரிகிறது. அப்போது, அடுத்த பருவத்தில், கரும்பு உற்பத்தி, 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
மழையின்மை, வறட்சி, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் குறைவு போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு, கரும்பு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில், சர்க்கரை ஆலைகள் வழக்கமாக, இரு பருவங்களில் கரும்பு அரவை மேற்கொள்வர். கோடைக்கு பின், ஜூலை மத்தியில் துவங்கி, சில சமயம் செப்டம்பர் வரை கரும்பு அரவை நடைபெறும்.இந்த நிலையில், வறட்சி காரணமாக, தமிழகம் முதன் முறையாக, இரண்டாவது பருவத்தில் கரும்பு அரவை மேற் கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|