பதிவு செய்த நாள்
29 ஏப்2013
00:47

ஜகார்த்தா:இந்தோனேஷிய அரசு, கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 1.5 சதவீதம் குறைத்து உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், கச்சா பாமாயில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.இதன் எதிரொலியாக, இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி:உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம்நாடு அதிகளவில், பாமாயிலை, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது.
குறிப்பாக, நடப்பு பருவத்தில், நாட்டின் பல முக்கிய மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு, வறட்சியின் காரணமாக, நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மிகவும் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலை, கடுமையாக உயர்ந்து உள்ளது.
இச்சூழ்நிலையில், இந்தியா, கச்சா பமாயில் மீதான ஏற்றுமதி வரியை குறைத்துள்ளதால், இந்திய எண்ணெய் வர்த்தகர்களுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.
உலகில், பாமாயில் உற்பத்தியில், இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, சர்வதேச போட்டியை எதிர்கொண்டு, கச்சா பாமாயில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலேயே, அதன் மீதான வரியை குறைத்து உள்ளது.தற்போது, கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரி, 10.5 சதவீதமாக உள்ளது.
இது, வரும் மே மாதம் முதல், 9 சதவீதமாக குறைக்கப்படும் என, இந்தோனேஷிய உணவு மற்றும் மீன் வளத் துறை இயக்குனர் பயஸ் அகமது தெரிவித்தார்.அதே சமயம், சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும், கோக்கோ மீதான ஏற்றுமதி வரி, மாற்றம் ஏதும் இன்றி, 5 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, அவர் மேலும் கூறினார்.
Œர்வ@தŒ நிலவரம்:இந்தோனேஷியாவின் கச்சா பாமாயில் உற்பத்தி உயர்ந்துள்ளதைஅடுத்து, சர்வதேச சந்தையில் இதன் விலை, ஒரு டன், 2,000 ரிங்கிட் என்றளவில் மிகவும் குறைந்துள்ளது.
உள்நாட்டில், போதிய அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லாததால், நம்நாடு இறக்குமதியே அதிகம் சார்ந்துள்ளது. நடப்பு பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.05 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த பருவத்தை விட, 5 லட்சம் டன் அதிகமாக இருக்கும்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நிலையாக உள்ளது. இதுவும், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு டன் சோயா எண்ணெயின் விலை, 100 டாலர் குறைந்து, 1,080 டாலர் என்றஅளவில் உள்ளது.
இது, மேலும் குறைந்து, 1,030 டாலராக சரிவுஅடைய வாய்ப்புள்ளது.இதே போன்று, ஒரு டன் சூரிய காந்தி எண்ணெய் விலையும் சரிவடைந்து, 1,180 டாலர் என்ற அளவில் உள்ளது.ஏற்றுமதி வரி:இந்த நிலையில், கச்சா பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை இந்தோனேஷியா குறைத்துஉள்ளதால், சர்வதேச சந்தையில், அதன் வரத்து அதிகரித்து, விலை மேலும் குறைய வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால், உள்நாட்டில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|