பதிவு செய்த நாள்
29 ஏப்2013
09:21

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.08 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.77 புள்ளிகள் அதிகரித்து 19301.49 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.90 புள்ளிகள் அதிகரித்து 5873.35 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமை மிகவும் மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. அதே சமயம், அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி, வரும் வாரத்தில், அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள், உருக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|