பதிவு செய்த நாள்
29 ஏப்2013
13:53

மண்டபம்: அமெரிக்கா, தாய்லாந்து நாடுகளில், தமிழக நண்டு கொள் முதல் குறைந்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் உயிருடன் பிடிபடும் நண்டுகளை அவித்து, இறைச்சி பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட இறைச்சி, டப்பாக்களில் அடைக்கப்பட்டு, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட, நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில், தமிழக நண்டுகளுக்கு, கிராக்கி அதிகம். விசைப்படகு கடலுக்கு செல்லும் காலங்களில், போதிய நண்டுகள் வரத்து இருந்தது.
தற்போது, மீன்பிடி தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே, நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு, விசைப்படகு தடைக்காலங்களில், நாட்டுப்படகில் பிடிபடும் நண்டுகளுக்கு, விலை அதிகம் கிடைத்தது. விசைப்படகில் பிடிபடும் நண்டுகள், கிலோ, 220 ரூபாயிக்கும், நாட்டுப்படகில் பிடிபடும் நண்டுகள், 160 ரூபாயிக்கும், கொள் முதல் செய்யப்பட்டன. தடைகாலத்தில், நாட்டு படகில் பிடிபடும் நண்டு விலை, ஏறுமுகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு, நாட்டுப்படகில் பிடிபடும் நண்டுகள், முன் இருந்த அதே விலையான, 160 ரூபாயிக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நண்டு கொள்முதல் செய்யும் ஏற்றுமதி கம்பெனி அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' இந்த ஆண்டு அமெரிக்கா, தாய்லாந்து நாடுகளில், தமிழகத்தில் பிடிபடும் நண்டுகளுக்கு, கிராக்கி குறைவாக உள்ளதால், விலை உயரவில்லை,''என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|