நண்டு கொள்முதல் குறைவால் விலை வீழ்ச்சிநண்டு கொள்முதல் குறைவால் விலை வீழ்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு ...
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
15:21

எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்பி ராம், 4 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி.கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவு நல்ல வேகத்தில் கிடைக்கிறது. டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 5 சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் சிப்செட் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார் உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1.2. ஜெல்லி பீன் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ்மெயில், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், டாகுமெண்ட் எடிட்டர், ஜி.பி.எஸ். ஆகியனவும் உள்ளன. ஆர்கனைசர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகிய விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2460mAh திறன் கொண்டதாக உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)