தங்கம் விலை சவரனுக்கு ரூ.112  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு ... விமான சேவை நிறுவனங்கள்லாபம் 750 கோடி டாலராக இருக்கும் விமான சேவை நிறுவனங்கள்லாபம் 750 கோடி டாலராக இருக்கும் ...
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்பு:கச்சா எண்ணெய் விலை சரிவால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2013
00:48

சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 2.50 ரூபாய் வரை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின், எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும், 15 மற்றும் 30ம் தேதிகளில், இரு முறை பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
தற்போது, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, உள்நாட்டில் பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள், இன்று நள்ளிரவு குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள்:அதுபோன்று, தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 3 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.ஓ.சி., பீ.பி.சி.எல்., மற்றும் எச்.பி.சி.எல்., ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் விலையை விட, எஸ்ஸார் ஆயில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் டீசல் விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் அதிகமாக உள்ளது.கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம், டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர், ""நாளை (மே 1) எஸ்ஸார் விற்பனை நிலையங்களில், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது,'' என்று தெரிவித்தார்.சென்ற மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவிற்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, சராசரியாக, 106.60 டாலராக இருந்தது. இது, சென்ற வாரம், 100.64 டாலராக சரிவடைந்தது.இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் கொள்முதலில், பிரென்ட் வகையின் பங்களிப்பு, 31.8 சதவீதமாகவும், துபாய், ஓமன் நாடுகளின் கச்சா எண்ணெயின் பங்களிப்பு, 68.2 சதவீதமாகவும் உள்ளது.ரூபாய் மதிப்பு:"கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் குறைந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலை, 40 பைசா வரை குறையும்,' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) பி.கே.கோயல் தெரிவித்தார்.
"அதேசமயம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 1 ரூபாய் என்ற அளவில் குறைந்தால் கூட, அது, பெட்ரோல், டீசல் விலையில், லிட்டருக்கு, 78 - 80 பைசா வரை உயர வழிவகுத்து விடும்,' என, அவர் மேலும் கூறினார்.வித்தியாŒம்சென்ற மார்ச் முதல் தற்போது வரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 4.65 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதே சமயம், பெட்ரோல், டீசல் இடையிலான விலை வித்தியாசம் லிட்டருக்கு, 19.37 ரூபாய் என்ற அளவில் உள்ளது.சென்ற ஜனவரியில், டீசல் மீதான கட்டுப்பாட்டை, படிப்படியாக நீக்குவது என, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, சென்ற மார்ச் 22ம் தேதி, ஒரு லிட்டர் டீசல் விலையில், 45 காசு உயர்த்தப்பட்டது.வர உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மற்றும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, டீசல் விலை உயர்வை நிறுத்தி வைக்குமாறு, மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களை அதிகாரபூர்வமற்ற முறையில் கேட்டு கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசலில், 4 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு, 30.49 ரூபாயாகவும், சமையல் எரிவாயு உருளைக்கு, 434.52 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான மத்திய அரசின் மானியச் செலவு, இரு மடங்கு உயர்ந்து உள்ளது.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானிய ஒதுக்கீடு, 40 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இத்துறையின் ஒட்டுமொத்த மானியம், 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மானிய சுமை:இதில், அரசு ஏற்கனவே, 96 ஆயிரத்து 880 கோடி ரூபாய் மானியச் சுமையை ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டீசல் விலை கட்டுப்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவது, மானிய விலையிலான சமையல் எரிவாயு உருளைக்கான கட்டுப்பாடு போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 33 சதவீதம் (65 ஆயிரம் கோடி ரூபாய்) மானியச் செலவினம் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)