பதிவு செய்த நாள்
02 மே2013
00:40

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 2.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 3 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு: அதேசமயம், சென்ற பிப்ரவரி மாதத்தில், மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, மைனஸ் 2.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. சென்ற மார்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகளின் உற்பத்தி, பின்னடைவை கண்டுள்ளது. இதில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 0.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, மைனஸ் 2.9 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
இதே மாதங்களில், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 9.9 சதவீதத்திலிருந்து, மைனஸ் 17.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளது.நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, 7.3 சதவீதத்திலிருந்து, 0.3 சதவீதமாக குறைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 1.6 சதவீதத்திலிருந்து, 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. உரத் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், 1.5 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
உருக்கு துறை:உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.2 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கணக்கீட்டு மாதத்தில், 7.1 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதம் என்றஅளவில் சரிவடைந்துள்ளது. இருப்பினும், மின்சார உற்பத்தி, 2.8 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 37.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|