முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.9 சதவீதம் வளர்ச்சிமுக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.9 சதவீதம் வளர்ச்சி ... புதுடில்லியி்ல் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயருகிறது புதுடில்லியி்ல் ஆட்டோ டாக்ஸி கட்டணம் உயருகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மோட்டார் வாகன விற்பனையில் மந்த நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
00:52

புதுடில்லி:நாட்டின் முன்னணி நிறுவனங் களின் வாகன விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை போன்றவற்றால், உள்நாட்டு சந்தைகளில், கார் விற்பனை சுணக்கம் கண்டுள்ளது.
அதேசமயம், ஐரோப்பா தவிர்த்த இதர உலக சந்தைகளில் தேவை சிறப்பாக அதிகரித்து வருவதையடுத்து, பல்வேறு நிறுவனங்களின் வாகன ஏற்றுமதி விறுவிறுப்படைந்துள்ளது. "உள்நாட்டில், பெட்ரோல் கார்களுக்கான தேவை சூடுபிடிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன' என, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ராகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
மாருதி சுசூகி:நாட்டின் கார் தயாரிப்பில், மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுசூகி, சென்ற ஏப்ரல் மாதத்தில், 97,302 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,00,415 ஆக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் கார் விற்பனை, மதிப்பீட்டு மாதத்தில், 3.1 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 90,255 என்ற எண்ணிக்கையிலிருந்து, 90,523 ஆக சற்று வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 33.28 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10,160 என்ற எண்ணிக்கையிலிருந்து, 6,779 ஆக சரிவடைந்துள்ளது.இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை, 4.89 சதவீதம் உயர்ந்து, 72,939 என்ற எண்ணிக்கையிலிருந்து, 76,509 ஆக உயர்ந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்:கார் தயாரிப்பில், இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார், சென்ற ஏப்ரல் மாதத்தில், 56,954 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (54,606 கார்கள்) விட, 4.30 சதவீதம் அதிகமாகும்.அதேசமயம், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 7.60 சதவீதம் சரிவடைந்து, 35,070 என்ற எண்ணிக்கையிலிருந்து, 32,403 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 25.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19,536 லிருந்து, 24,551 ஆக அதிகரித்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்:டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சென்ற ஏப்ரல் மாதத்தில், 1,60,502 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,71,551 ஆக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 6.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு சந்தைகளில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 5.54 சதவீதம் குறைந்து, 1,51,181 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,42,794 ஆக சரிவடைந்துள்ளது.சென்ற ஏப்ரலில், இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை, 67,966 லிருந்து, 67,849 ஆகவும், ஸ்கூட்டர் விற்பனை, 35,833 லிருந்து, 29,692 ஆகவும் குறைந்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 22,272 லிருந்து, 21,714 ஆக குறைந்துள்ளது. இதில், இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி, 20,370 லிருந்து, 17,708 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.எனினும், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை, 62 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,904 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,713 ஆக அதிகரித்துள்ளது.
மகிந்திரா:சென்ற ஏப்ரல் மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை, 2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 41,432 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 40,715 ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை, 2 சதவீதம் உயர்ந்து, 39,295லிருந்து, 39,902 ஆக சற்று அதிகரித்துள்ளது.இதே போன்று, இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், 8 சதவீதம் அதிகரித்து, 1,420 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,530 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
ரெனோ:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை, சென்ற ஏப்ரல் மாதத்தில், 10 மடங்கு அதிகரித்து, 6,314 ஆக உயர்ந்துள்ளது. இது,கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 615 ஆக இருந்தது.
இந்திய யமஹா:இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 52,792 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 36,581 ஆக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 44.32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டு சந்தைகளில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 33.34 சதவீதம் அதிகரித்து, 26,944 என்ற எண்ணிக்கையிலிருந்து, 35,927 ஆக உயர்ந்து உள்ளது.இதே போன்று, இதன் வாகன ஏற்றுமதியும், 75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,637 லிருந்து, 16,865 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)