அன்னிய நேரடி முதலீட்டைஅதிகரிக்க அரசு நடவடிக்கைஅன்னிய நேரடி முதலீட்டைஅதிகரிக்க அரசு நடவடிக்கை ... கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 3.57 கோடி டன் கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 3.57 கோடி டன் ...
மடி கணினி விலை குறைப்பில் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2013
00:40

மும்பை:சோனி, எச்.பி., நிறுவனங்கள், "விண்டோஸ் 8' இயக்கத் தொகுப்புடன் கூடிய மடிக் கணினி (லேப்-டாப் கம்ப்யூட்டர்) விலையை, 2,000 ரூபாய் வரை குறைத்துள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை குறைந்து வருகிறது. கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள் அனைத்தும், "லேப்-டாப்', "டேப்லெட்', "ஸ்மார்ட் போன்' என, பல்வேறு கையடக்க சாதனங்களில் கிடைப்பது தான் இதற்கு காரணம்.

"விண்டோஸ் 8':இதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடிய "விண்டோஸ் 8' இயக்கத் தொகுப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ளது.கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட, இந்த இயக்கத் தொகுப்பு, சரிவடைந்து வரும் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு, வளரும் நாடுகளில், கம்ப்யூட்டர் விற்பனை சூடு பிடிக்கவில்லை. அதே சமயம், புதிய இயக்கத் தொகுப்புடன் வெளிவந்த "லேப்-டாப்' உள்ளிட்ட இதர சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

தொடுதிரை:இந்தியாவில், தொடுதிரை தொழில்நுட்பம் கொண்ட "லேப்-டாப்' சாதனத்தின் விலை, 30 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இந்நிலையில், சோனி, எச்.பி., நிறுவனங்கள், "லேப்-டாப்' சாதனங்களின் விலையை 2,000 ரூபாய் வரை குறைத்துள்ளன.
விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அவை இத்தகைய நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:"விண்டோஸ் 7' இயக்கத் தொகுப்பு கொண்ட "லேப்-டாப்' சாதனங்களின் இருப்பு உள்ள வரை, புதிய சாதனங்களின் விலை குறையாது. தற்போது, பழைய இயக்கத் தொகுப்பு கொண்ட சாதனங்களின் இருப்பு குறைந்து இருக்கும் என, தெரிகிறது.

நடவடிக்கை:இதையடுத்து, விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், புதிய தொடுதிரை தொழில் நுட்ப "லேப்-டாப்' சாதனங்களின் விலையை நிறுவனங்கள் குறைத்துள்ளன. இது, வர்த்தகத்தில் வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறை தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும், "விண்டோஸ் 8' இயக்கத் தொகுப்பின் விலையை குறைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாகவே, சோனி, எச்.பி., நிறுவனங்கள், விலையை குறைத்துள்ளன.எனினும், லெனோவா, ஏசஸ் போன்ற நிறுவனங்கள், புதிய இயக்கத் தொகுப்புடன் கூடிய "லேப்-டாப்' சாதனங்களின் விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)