பதிவு செய்த நாள்
04 மே2013
00:41
சென்னை:தங்கம் விலை, சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 20,744 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னையில், கடந்த, மூன்று நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, நேற்று அதிகரித்து காணப்பட்டது.நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,553 ரூபாய்க்கும், 1 சவரன், 20,424 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,300 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 2,593 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 20,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 430 ரூபாய் உயர்ந்து, 27,730 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி விலை, ஒரு ரூபாய் உயர்ந்து, 48.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 1,045 ரூபாய் அதிகரித்து, 45,555 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|