ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வுஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு ... யூரியா உர விற்பனை அதிகரிப்பு யூரியா உர விற்பனை அதிகரிப்பு ...
கோரப்படாத டிவிடெண்டு தொகை ரூ.1,101 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2013
00:43

புதுடில்லி:நிறுவனங்களில், பங்குதாரர்களால் கோரப்படாத வகையில், 1,101 கோடி ரூபாய் டிவிடெண்டு தொகை இருப்பதாக, நிறுவன விவகாரங்கள் துறையின் அமைச்சர் சச்சின் பைலட், லோக் சபாவில் தெரிவித்தார்.நிகர லாபம்:நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும், அவை ஈட்டும் நிகர லாபத்தில், குறிப்பிட்ட தொகையை, அவற்றின் பங்குதாரர்களுக்கு, டிவிடெண்டாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், நிறுவனங்கள் அவற்றின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கு பிறகு, அறிவிக்கப்பட்ட டிவிடெண்டு தொகையை அளிக்கின்றன.

இந்த டிவிடெண்டு தொகை, அறிவிக்கப்பட்ட தினத்திலி ருந்து, 30 நாட்களுக்குள் பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்டு தொகையை பங்குதாரர்கள் வாங்கா விடில், அது "கோரப்படாத டிவிடெண்டு கணக்கிற்கு' மாற்றப்படுகிறது.இவ்வகையில், கடந்த ஏழு ஆண்டுகளில், இக்கணக்கில், 1,406 நிறுவனங்களில், 1,101.35 கோடி ரூபாய் கோரப்படாத டிவிடெண்டு தொகை உள்ளது.
இத்தொகை, மத்திய அரசின்,"முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தின்' வாயிலாக செலவிடப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:மேற்கண்ட மொத்த நிறுவனங்களுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கோரப்படாத டிவிடெண்டு தொகை, மிக அதிகபட்சமாக, 113 கோடி ரூபாயாகும். இதைத் தொடர்ந்து, ஐ.டி.சி., (74.34 கோடி ரூபாய்), இந்துஸ்தான் யூனிலிவர் (49.05 கோடி ரூபாய்), ஹீரோ மோட்டோகார்ப் (40.22 கோடி ரூபாய்), டாட்டா ஸ்டீல் (38.53 கோடி ரூபாய்), லட்சுமி விலாஸ் பேங்க் (34.14 கோடி ரூபாய்), ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் (19.17 கோடி ரூபாய்), எல் அண்டு டி (18.69 கோடி ரூபாய்), எம்.ஆர்.பி.எல். (14.23 கோடி ரூபாய்), ஐ.டீ.பீ.ஐ. பேங்க் (13.59 கோடி ரூபாய்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இவை தவிர, எச்.டீ.எப்.சி. பேங்க், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, எச்.டீ.எப்.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, டி.சி.எஸ்., மற்றும் ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் ஆகிய நிறுவனங்களிலும், அதிகளவில் கோரப்படாத டிவிடெண்டு தொகை உள்ளது.நினைவூட்டல்:டிவிடெண்டு தொகையை கோராத பங்குதாரர்களுக்கு, நிறுவனங்கள், பல முறை நினைவூட்டு கடிதங்கள் அனுப்புகின்றன. அதன் பிறகும், டிவிடெண்டு கோரப்படாத நிலையில், அத்தொகை, "முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு' மாற்றப்படுவதாக, அமைச்சர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)