பதிவு செய்த நாள்
05 மே2013
00:43

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 17 பொதுத் துறை நிறுவனங்களிடம், 1,62,338 கோடி ரூபாய் ரொக்க கையிருப்பு உள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.அதிகளவு ரொக்க கையிருப்பை கொண்டுள்ள பொதுத் துறை நிறுவனங்களுள், கோல் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு மிக அதிகளவாக, 43,776 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இதையடுத்து, ஓ.என்.ஜி.சி., (22,450 கோடி ரூபாய்), என்.எம்.டீ.சி., (17,230 கோடி ரூபாய்) மற்றும் என்.டி.பி.சி., (16,185 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.இவை தவிர, ஆயில் இந்தியா (ஓ.ஐ.எல்.,) நிறுவனம், 11,770 கோடியும், செயில் நிறுவனம் 13,207 கோடி ரூபாயையும் ரொக்க இருப்பாக கொண்டு உள்ளன.ரொக்க கையிருப்பில் உள்ள தொகையை நிறுவனங்கள், டிவிடெண்டு வழங்கவும், நடைமுறை மூலதனச் செலவிற்கும், வரி, மூலதனச் செலவு மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|