பதிவு செய்த நாள்
05 மே2013
00:48

புதுடில்லி:நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 25.54 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், அறுவடை செய்யப்படும் தானியங்கள், ஜூன் மாதம் வரையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. சென்ற பிப்ரவரி மாதம், அறிவிக்கப்பட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி டன் என்ற அளவில்தான் இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, அதிகரித்துள்ளதைஅடுத்து, உற்பத்தி மதிப்பீடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடம்:இருப்பினும், கடந்த வேளாண் பருவத்தில் உற்பத்தியான, 25.93 கோடி டன் என்ற சாதனை அளவை விட, நடப்பு பருவத்திற்கான தானிய உற்பத்தி மதிப்பீடு சற்று குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில், தானிய உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.நடப்பு வேளாண் பருவத்தில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் வறட்சியால், @மற்கண்ட மாநிலங்களில், உணவு தானிய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதர மாநிலங்களில், உற்பத்தி அதிகரிப்பால், ஒட்டு மொத்த அளவில் தானிய உற்பத்தி, அதிகரிக்கும் என, தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.நெல்:நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி, 10.42 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 10.18 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது, கடந்த ஆண்டின் நெல் உற்பத்தி அளவான, 10.53 கோடி டன்னை விட, குறைவாகும்.
கோதுமை:கோதுமை உற்பத்தி, 9.36 கோடி டன்னாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 9.23 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு வேளாண் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, 9.49 கோடி டன்னாக இருந்தது.பருப்பு வகைகள்:இதர தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி முறையே, 3.95 கோடி டன் மற்றும் 1.80 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை கடந்த ஆண்டு வேளாண் பருவத்தில் முறையே, 4.20 கோடி டன் மற்றும் 1.71 கோடி டன் என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டிற்கான முதல் மதிப்பீட்டில், மேற்கண்டவற்றின் உற்பத்தி முறையே, 3.85 கோடி டன் மற்றும் 1.76 கோடி டன் என்ற அளவில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுஇருந்தது.நடப்பு வேளாண் பருவத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 3.07 கோடி டன்னாக இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி மாத மதிப்பீட்டில், 2.95 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை ஈடு செய்யும் அளவிற்கு இல்லாததால், நம்நாடு மேற்கண்டவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.பருத்தி:நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.38 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும்என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முதல் மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது.கரும்பு உற்பத்தி, 33.61 கோடி டன்னாக இருக்குமென மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது, முதல் மதிப்பீட்டில், 33.45 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒட்டு மொத்த அளவில், நாட்டின் தானிய உற்பத்தி, நன்கு இருக்கும். என்றாலும், அரசின் சேமிப்பு கிடங்குகளில், போதிய அளவிற்கு இடவசதி இல்லாதது அதிக இடர்பாடு அளிப்பதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு, கோதுமை கையிருப்பை குறைக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, கோதுமை ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|