பதிவு செய்த நாள்
05 மே2013
00:49

சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 248 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற ஏப்ரலில், கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை, கடந்த வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், 1 கிராம், 2,593 ரூபாய்க்கும், 1 சவரன், 20,744 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 12 ரூபாய் குறைந்து, 2,581 ரூபாய்க்கும், சவரனுக்கு, 96 ரூபாய் சரிவடைந்து, 20,648 ரூபாய்க்கும் விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 125 ரூபாய் குறைந்து, 27,605 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,612 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,896 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, கடந்த வாரத்தில் மட்டும், தங்கத்தின் விலை, கிராமுக்கு, 31 ரூபாயும், சவரனுக்கு, 248 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|