பதிவு செய்த நாள்
05 மே2013
00:52

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், கடன்பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள், 30,859 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 48,468 கோடி ரூபாயாக இருந்தது.பங்குச் சந்தை நிலவரங்கள் சாதகமாக இல்லாததால், நிறுவனங்கள் திரட்டிய தொகை சரிவடைந்துள்ளது.
விரிவாக்க நடவடிக்கைகள்:நிறுவனங்கள், தங்களது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை, கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிக் கொள்கின்றன.மதிப்பீட்டு நிதியாண்டில், 60 இந்திய நிறுவனங்கள், பல்வேறு வழிமுறைகளில் நிதி திரட்டியுள்ளன. நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, சென்ற 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 6,718 கோடி ரூபாயையும், டிசம்பர் மாதத்தில், 5,605 கோடி ரூபாயையும் திரட்டிக் கொண்டு உள்ளன.
கடந்த நிதியாண்டில், 11 நிறுவனங்கள், கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாக, 15,386 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. முந்தைய நிதியாண்டில், இதே வழிமுறையில், 20 இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 35,611 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.உரிமை பங்குகள்:அதேசமயம், கடந்த நிதியாண்டில், நிறுவனங்கள், அவற்றின் பங்குதாரர்களுக்கு, உரிமை பங்குகளை ஒதுக்கீடு செய்து திரட்டிய தொகை நான்கு மடங்கு அதிகரித்து, 8,945 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,375 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|