பதிவு செய்த நாள்
07 மே2013
03:51
நாமக்கல்,:தமிழகத்தில் முட்டை விலை, 260 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, விவாதம் நடந்தது. அதையடுத்து, தமிழகம் கேரளாவில், 270 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, பத்து காசுகள் குறைத்து, 260 காசுகளாக, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 300, பெங்களூரு, 260, மைசூரு, 255, ஐதராபாத், 215, மும்பை, 252, விஜயவாடா, 215, கோல்கட்டா, 255, பர்வாலா, 208, டில்லி, 220.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 55 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 61 ரூபாயாக, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|