தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56  குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆட்டோ மொபைல் சுவாரசியமான கார் தகவல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2013
12:57

ஆட்டோ மொபைல் துறையைப் பற்றியும், கார்களைப் பற்றியும் உள்ள விஷயங்களை தெரிந்துக் கொள்வதில், யாருக்கு தான் ஆர்வம் இருக்காது. அது மாதிரி, சில சுவாரஸ்யமான தகவல்களை, இக்கட்டுரையில் காணலாம். முதன் முதலில், இன்ஜின் பொருத்தி தயாரிக்கப்பட்ட கார், ஜெர்மனியில் கார்ல் பென்ஸ் என்பவரால், 1885ல் தயாரிக்கப்பட்டதாகும். 1888 முதல் 1893 வரை, 25 கார்களை இவர்கள் உருவாக்கினர்.
உலகிலேயே கார் பார்க் செய்ய அதிக செலவாகும் நகரம் லண்டன் ஆகும். லண்டனின் மத்திய பகுதிகளில், பார்க் செய்ய கிட்டத்தட்ட, 578 யூரோக்கள், ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர, அங்கு சென்று பார்க் செய்ய, கன்ஜெஷன் சார்ஜ் வேறு கட்ட வேண்டுமாம்.
உலகிலேயே, வண்டி ஓட்ட மிகக் கொடுமையாக வழங்கக் கூடிய நகரம் மனிலா. மோசமான சாலைகள், முடிவில்லா போக்குவரத்து, சிகப்பு விளக்கை மதிக்காத ஒட்டுனர்கள் என்று, இந்நகரில் வண்டி ஓட்டுவது மிகவும் கடினமாம்.
கடந்த, 1939ம் ஆண்டில், சான் ஆன்டோனியோ லைட் என்பவர், எதிர்கால கார்களை அழகாய் மடித்து, ஒரு பெரிய சூட்கேஸ் அளவில் செய்து விடலாம் என்பதைப் பற்றி விரிவாய் எழுதியிருந்தாராம். உலகின் மிக அதிக விலைக்கு விற்கப் பட்ட கார், புகாட்டி ராயல் கெல்நெல் கூப் ஆகும். 1987ம் ஆண்டு, 8,700,000 அமெரிக்க டாலருக்கு இது விற்கப்பட்டது. 1972ம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஓட்டப்பட்ட அதிகபட்ச வேகம், 60 மைல் மணிக்கு என்பதாகும். அதுவே, 1982ம் ஆண்டு, 17 மைல் மணிக்கு, என்ற வேகம் தான் போக முடிந்தது. அப்படியென்றால் தற்போதைய நிலை? உலகின் முதல் கார்களில், ஸ்டியரிங் வீல் கிடையாது. அதற்கு பதில் ஒரு லிவரையே ஓட்டுனர் பயன்படுத்தினர். இன்றைய வீடியோ கேம்ஸ் போலத் தான், அன்று காரை ஓட்டியுள்ளார் என்பது வேடிக்கையான உண்மை தான்.
முதல் கார் ரேடியோ, 1929ம் ஆண்டு தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதற்கு முன் நீண்ட தூர பயணம் சென்றவர்கள் பாவம் தான். கார் ஓட்டுபவர்களில், 90 சதவீத பேர், கார் ஓட்டும் போது, பாட்டு பாடுவதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதிகமான அளவு, ரோல்ஸ் ராய்ஸ் கார்களை கொண்ட நகரம், ஹாங்காங் ஆகும். ஏர்-பேக் வெறும், 40 மில்லி செகண்ட் தான், விபத்தின் போது விரிவடைய எடுத்துக் கொள்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு நபருக்கும், ஒரு கார் என்ற விகிதத்தில், இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குழந்தை
களையும் சேர்த்தே தான் இந்த கணக்கு. உலகின் மிக அதிக விலையுள்ள கார், 2010ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் விலை, இரண்டு மில்லியன் டாலருக்கும் மேலாகும். மூன்று கார்கள் தான், இதில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)