முன்பேர சந்தைகளில்ரூ. 14.77 லட்சம் கோடிக்கு வர்த்தகம்முன்பேர சந்தைகளில்ரூ. 14.77 லட்சம் கோடிக்கு வர்த்தகம் ... ஆபரண தங்கம்  விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.136 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நாட்டின் கார் விற்பனை 10.43 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2013
23:35

புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனை, 10.43 சதவீதம் சரிவடைந்து, 1,50,789 ஆக குறைந்துள்ளது. வட்டி விகிதம்கடந்த ஆண்டின் இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 1,68,354 ஆக இருந்தது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மந்த நிலை, வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது மற்றும் எரிபொருள்களின் விலை உயர்வு போன்றவற்றால், உள்நாட்டில், கார் விற்பனை, தொடர்ந்து ஆறு மாதங்களாக சரிவடைந்துள்ளது. இந்த நிலை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை
இருப்பினும், தற்போது, பெட்ரோல் விலை குறைந்து வருவதால், சிறிய வகை கார்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின், உள்நாட்டு கார் விற்பனை, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 4.81 சதவீதம் உயர்ந்து, 72,939 என்ற எண்ணிக்கையிலிருந்து, 76,509 ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, இதே மாதத்தில், 7.53 சதவீதம் சரிவடைந்து, 35 ஆயிரத்திலிருந்து, 32,364 ஆக குறைந்துள்ளது.டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை, 52.07 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 18,610 என்ற எண்ணிக்கையிலிருந்து, 8,918 ஆக சரிவடைந்திருந்தது.கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 2.06 சதவீதம் சரிவடைந்து, 8,61,608 என்ற எண்ணிக்கையிலிருந்து, 8,43,889 ஆக குறைந்துள்ளது.
ஸ்கூட்டர்
அதேசமயம், ஸ்கூட்டர் விற்பனை, 14.72 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,27,924 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,61,475 ஆக அதிகரித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த இருசக்கர வாகன விற்பனை, 0.95 சதவீதம் உயர்ந்து, 11,57,114 என்ற எண்ணிக்கையிலிருந்து, 11,68,080 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, சென்ற ஏப்ரலில், 7.19 சதவீதம் அதிகரித்து, 32,044 என்ற எண்ணிக்கையிலிருந்து, 34,348 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.வர்த்தக வாகன விற்பனை, 0.75 சதவீதம் உயர்ந்து, 56,257ல் இருந்து, 56,678 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.ஏற்றுமதிவாகன ஏற்றுமதி, சென்ற ஏப்ரல் மாதத்தில், 9.14 சதவீதம் குறைந்து, 2,65,200 என்ற எண்ணிக்கையில்இருந்து, 2,40,948ஆக சரிவடைந்து உள்ளது. சென்ற ஏப்ரலில், உள்நாட்டில், கார் உற்பத்தி, 2.18 சதவீதம் சரிவடைந்து, 17.21 லட்சத்திலிருந்து, 16.84 லட்சமாக குறைந்துள்ளது.ஒட்டு மொத்த வாகன விற்பனை, 0.34 சதவீதம் சரிவடைந்து, 14,72,452 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14,67,492 ஆக குறைந்து உள்ளது என, "சியாம்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)