பதிவு செய்த நாள்
10 மே2013
23:36
சென்னை: நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 136 ரூபாய் குறைந்து, 20,448 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,573 ரூபாய்க்கும், 1 சவரன், 20,584 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 17 ரூபாய் குறைந்து, 2,556 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 136 ரூபாய் சரிவடைந்து, 20,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 185 ரூபாய் குறைந்து, 27,335 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 48.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 45,195 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|