பதிவு செய்த நாள்
11 மே2013
08:22

புதுடில்லி : டீசல் விலை நேற்று லிட்டருக்கு, 1.02 ரூபாய் உயர்த்தப்பட்டது. சென்னையில், இந்த விலை உயர்வு, 1.10 ரூபாயாக இருக்கும். விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால், கடந்த ஜனவரி முதல், மாதம் ஒன்றுக்கு, லிட்டருக்கு, 50 காசுகள் விலையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதத்தில், டீசல் விலை லிட்டருக்கு, 45 காசு உயர்த்தப்பட்டது. நேற்று டீசல் விலை லிட்டருக்கு, 1.02 ரூபாய் உயர்த்தப்பட்டது. இது இந்த ஆண்டில், நான்காவது விலை உயர்வு. சென்னையில் உள்ளூர் வரிகள் மற்றும் வாட் வரி சேர்த்து, டீசல் விலை, லிட்டருக்கு, 1.10 ரூபாய் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|