பதிவு செய்த நாள்
11 மே2013
10:26

xபாட்னாதபால் நிலையங்கள் மூலம் தங்கக் காசுகள் விற்பனையில், பீகார் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2012-13), பீகார் மாநிலத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூலம், 41 கிலோ அளவுக்கு, தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டிலேயே, அம்மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இங்குள்ள மொத்த தபால் நிலையங்களில், தங்கக் காசுகள் விற்பனையில், பாட்னா தபால் நிலையம் முதலிடத்தையும், பாங்கிபூர் மற்றும் பாகல்பூர், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன.இத்தகவலை, பீகார் மாநில போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், பிரிகேடியர் பூர்யாங் வெளியிட்டுள்ளார். தங்கக் காசுகள் விற்பனையில், பீகாருக்கு அடுத்ததாக, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|