பதிவு செய்த நாள்
11 மே2013
14:23

டாடா மோட்டார்ஸ் இந்தியா, கடந்த வருடக் கடைசியில் டாடா இண்டிகா ev2 மாடலை அறிமுகப்படுத்தியது. இண்டிகா ev2 எல்லா வகையிலும்மேம்படுத்தப்பட்ட மாடல் என்று கூறும் அளவிற்கு பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய டீசல் "ஹாட்ச்பேக்'க்கில் "ஆட்டோ டிரைவ் அசிஸ்ட்' மற்றும் "க்ளட்ச் டூ ஸ்டார்ட்' அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. இப்புதிய காரில் ஸ்டைலான ஹெட் லாம்ப், புதிய முன்புற பம்பர், 3 ஸ்டெப் கொண்ட க்ரோம் க்ரில், ஸ்போர்டியான பின்புற ஸ்பாய்லரூம் அதன் உடனான ஸ்டாப் லாம்பும், ஸ்போர்டி அலாய் வீலும், கவர்ச்சிகரமான டீகால்களும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா இண்டிகா ev2 LS மற்றும் LX என்ற இரண்டு டீசல் மாடல்களில் கிடைக்கிறது.
டாடா இண்டிகா ev2வின் சிறப்பம்சங்கள் மைலேஜ்: இந்திய ஹேட்ச் பேக்களில் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியது இண்டிகா ev2 டாடா மோட்டார் தங்களின் மைலேஜ் 25 கிலோமீட்டர் லிட்டருக்கு என்ற ஒரு பிரச்சாரத்தையே மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பவர்: இதன் காமன் ரெயில் CR4 டீசல் என்ஜின் 1396 சிசி திறனுடன் 90 PS பவரையும் 4000ஆர்பிஎம்மிலும் 1140 NM டார்க்கை 1800-3000 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இதன் ஆக்சிலரேஷன் மிகவும் சிறப்பாக இருப்பதால் இந்த செக்மெண்ட் ஹேட்ச்பேக்கில் இதுவே சிறந்த பிக் அப் கொடுக்கிறது எனலாம். உட்புற இடவசதி: ஐந்து பேர் தாராளமாய்அமர்ந்து செல்லக்கூடிய இடவசதியும் கவர்ச்சிகரமான உட்புற அம்சங்கள் ev2 வில் இருக்கிறது.
பிரீமியம் வுட் ஃபினிஷ் கொண்ட சென்டர் கன்சோல் இதன் உட்புறத்திற்கு நளினமான தோற்றத்தைக் கொடுக்கிறது. ஸ்பாட் லைட்கள் கொண்ட முன்புற கேபிள் லைட், புதிய பீஜ் நிற சீட் கவர்கள் மற்றும் டேஷ்போர்ட், லெதரினால் ஆன கியர் ஷிஃப்ட் நாப் போன்றவை உட்புற அமைப்பை மேலும் கவர்ச்சிகரமாக்குகிறது. சொகுசு அம்சங்கள்: முன்புற பவர் அவுட்லெட், முன்புற சீட்களுக்கான லம்பர் சப்போர்ட் (முதுகு வலி இல்லாமல் இருக்க), ஃப்யூவல் லிட்டை திறக்கும் ரிமோட் வசதி மற்றும் பூட்டை திறக்கும் ரிமோட் வசதி, பார்சல் ஷெல்ஃப், பவர்ஸ்டியரிங், நான்கு கதவுகளுக்கு பவர் விண்டோஸ் போன்றவை இண்டிகா ev2வில் உள்ள சொகுசு அம்சங்களாகும். பாதுகாப்பு அம்சங்கள்: பின்புற கதவுகளுக்கு சைல்ட் சேஃப்டி லாக், மேலே அமைக்கப்பட்டுள்ள ஸ்டாப் லாம்ப், கொலாப்சிபிள் ஸ்டியரிங், 3பாயிண்ட் சீட் பெல்ட் முன்புற பயணிகளுக்கு, கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் வித் ரிமோட் போன்றவைகள் இதன் பாதுகாப்பு அம்சங்களாகும். இண்டிகா ev2 சீ ப்ளூ, ஸ்பைஸ் ரெட், மின்ட் வொயிட், நியோ ஆரஞ்சு, ஜெட் சில்வர் என்ற ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. மொத்தத்தில் இண்டிகா ev2 ஸ்டைலான தோற்றம், எரிபொருள் சிக்கனம், நெடுஞ்சாலை பயணத்திற்கு பாதுகாப்பு, ஓட்டுவதற்கு சுலபம், நம்பிக்கையான ப்ராண்ட், நியாயமான விலை என்று எல்லாவிதத்திலும் நிறைவாகவே உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|