பதிவு செய்த நாள்
12 மே2013
00:23

மும்பை:இந்திய ஆயத்த ஆடைகள் சந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு, 8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, 2.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான "கேர்' தெரிவித்துள்ளது.சந்தை மதிப்பு:கடந்த 2006-07ம் நிதியாண்டில், ஆயத்த ஆடைகளுக்கான சந்தை மதிப்பு, 1.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு, 10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, 2.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், உள்நாடு மற்றும் சர்வதேச சுணக்க நிலையால், கடந்த 2012-13ம் நிதியாண்டில், இத்துறையின் சந்தை மதிப்பு வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.இருப்பினும், தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்பி வருவதுடன், தனிநபர் செலவிடும் வருவாயும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்திய ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என, "கேர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊக்குவிப்பு திட்டங்கள்:மத்திய அரசு, ஜவுளி துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 2 சதவீத வட்டி மானியம் தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவிலும், பல நாடுகளின் பொருளாதாரம் மேம்படத் துவங்கிஉள்ளது. இதனால், ஆயத்த ஆடைகளுக்கான தேவை அதிகரித்து, இத்துறை வளர்ச்சி காணும் என, "கேர்' நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|