பதிவு செய்த நாள்
12 மே2013
00:23

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, இம்மாதம் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 206 கோடி டாலர் (11,330 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,431 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 160 கோடி டாலர் (8,800 கோடி ரூபாய்) குறைந்து, 29,637 கோடி டாலராக (16.30 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 30 கோடி டாலர் (1,650 கோடி ரூபாய்) குறைந்து, 26,373 கோடி டாலராக (14.50 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இதே போன்று, தங்கம் கையிருப்பும், 172 கோடி டாலர் சரிவடைந்து, 2,397 கோடி டாலராக குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென், ஸ்டெர்லிங் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி, மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|