பதிவு செய்த நாள்
13 மே2013
15:36
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், தன் கேன்வாஸ் வரிசை போன்கள் விற்பனை பத்து லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.
முதன் முதலாக, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏ 100 சூப்பர் போன் கேன்வாஸ் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வரிசையில் பல போன்கள் வெளியாயின. ஏ 116 கேன்வாஸ் போன், மக்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்று, அதிக அளவில் விற்பனையானது. அறிமுகமான ஒரே நாளில், 9,000 போன்கள் விற்பனை செய்யப்பட்டன. பின்னர், இதற்கான முன்னதான ஆர்டர்களை மைக்ரோமேக்ஸ் பெற்றது. இந்த வரிசையில், அண்மையில், ஏ 72 கேன்வாஸ் விவா ஸ்மார்ட் போன் வெளியானது, இதன் விலை ரூ. 6,499 மட்டுமே. விரைவில் ஏ 115 மற்றும் ஏ 111 வெளியாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|