சில்லரை பணவீக்கம் 9.39 சதவீதமாக சரிவுசில்லரை பணவீக்கம் 9.39 சதவீதமாக சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ...
ஏற்றுமதி 2,416 கோடி டாலராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2013
00:32

புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,416 கோடி டாலராக (1.33 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,370 கோடி டாலர் /1.30 லட்சம் கோடி ரூபாய்) விட, 1.6 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்தார்.

வர்த்தக பற்றாக்குறை:இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 10.9 சதவீதம் அதிகரித்து, 3,780 கோடி டாலரிலிருந்து (2.07 லட்சம் கோடி ரூபாய்), 4,195 கோடி டாலராக (2.31 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரலில், நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை 1,779 கோடி டாலராக (97,845 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1,400 கோடி டாலராக (77 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான, சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும், நாட்டின் தங்கம் இறக்குமதி, 138 சதவீதம் உயர்ந்து, 310 கோடி டாலரிலிருந்து (17,050 கோடி ரூபாய்), 750 கோடி டாலராக (41,250 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவால், இதற்கான தேவை உள்நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, மார்ச் மாதத்தை காட்டிலும், சென்ற ஏப்ரலில், தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது என, ராவ் மேலும் தெரிவித்தார்.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 3.9 சதவீதம் உயர்ந்து, 1,410 கோடி டாலராக (77,550 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

மேலும், எண்ணெய் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதியும்,14.9 சதவீதம் அதிகரித்து, 2,786 கோடி டாலராக (1.53 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.ஆபரணங்கள்:அரிசி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (22 சதவீதம்), ஆயத்த ஆடைகள் (8.6 சதவீதம்), பருத்தி (8.1 சதவீதம்), தேயிலை (5.4 சதவீதம்) மற்றும் கடல் பொருட்கள் (25 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அ@தŒமயம், பெட்ரோலியப் பொருட்கள் (0.5 சதவீதம்), பொறியியல் (8.6 சதவீதம்), ரசாயனம் (1.4 சதவீதம்), கையினால் தயாரிக்கப்பட்ட நூலிழை (3.3 சதவீதம்), மற்றும் மருந்துகள் (1.6 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி பங்களிப்பு பின்னடைவை கண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)