பதிவு செய்த நாள்
19 மே2013
00:41
சென்னை:கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 504 ரூபாய் குறைந்துள்ளது.'அட்சய திருதியை' மற்றும் விலை குறைவு போன்றவற்றால், சென்ற வாரத்தில், தங்கம் விற்பனையில் விறுவிறுப்பு காணப்பட்டது.நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,488 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,904 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 11 ரூபாய் குறைந்து, 2,477 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 88 ரூபாய் சரிவடைந்து, 19,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 115 ரூபாய் குறைந்து, 26,495 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 46.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,185 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 63 ரூபாயும், சவரனுக்கு, 504 ரூபாயும் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|