மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல்மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல் ... இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு 38 சதவீதம் உயரும் இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு 38 சதவீதம் உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2013
00:45

புதுடில்லி: நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 18,422 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டு உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (13,215 கோடி ரூபாய்) விட, 39.40 சதவீதம் அதிகமாகும் என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்த நிலை:இதே போன்று, கணக்கீட்டு மாதத்தில், டாலர் மதிப்பின் அடிப் படையிலான, இவற்றின் ஏற்றுமதி, 32.79 சதவீதம் வளர்ச்சி கண்டு, 255 கோடி டாலரிலிருந்து, 339 கோடி டாலராக அதிகரித்துள்ளது.சர்வதேச நாடுகள், பொருளாதார மந்த நிலையிலிருந்து மேம்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான, சென்ற ஏப்ரலில், நம்நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, விறுவிறுப்படைந்துள்ளது.
இதையடுத்து, நவரத்தினங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி முறையே, 200 சதவீதம் மற்றும் 500 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே போன்று, கச்சா வைரம் ஏற்றுமதியும், 100 சதவீத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.ஆக, உலகளவில், நம்நாட்டின் ஆபரணங்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 44.19 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,911 கோடி ரூபாயிலிருந்து, 9,965 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இதன் ஏற்றுமதி, 37.35 சதவீதம் அதிகரித்து, 133 கோடி டாலரிலிருந்து, 183 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 22.36 லட்சம் காரட்டிலிருந்து, 25.47 லட்சம் காரட்டாக அதிகரித்துள்ளது. அதேசமயம், சென்ற ஏப்ரலில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில் சரிவடைந்துள்ளது.தங்க நாணயங்கள்ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 9.55 சதவீதம் குறைந்து, 3,371 கோடியிலிருந்து, 3,049 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, டாலர் மதிப்பின் அடிப்படையிலான, தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 13.84 சதவீதம் சரிவடைந்து, 65 கோடி டாலரிலிருந்து, 56 கோடி டாலராக குறைந்துள்ளது.இருப்பினும், கணக்கீட்டு மாதத்தில், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 18.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,042 கோடி ரூபாயிலிருந்து, 2,429 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே போன்று, டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 13.26 சதவீதம் உயர்ந்து, 39 கோடி டாலரிலிருந்து, 44 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
முத்துக்கள்:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் நவரத்தினங்கள் ஏற்றுமதி, ரூபாய் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.இதன்படி, ரூபாய் மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 234.14 சதவீதம் அதிகரித்து, 86 கோடி ரூபாயிலிருந்து, 289 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இதன் ஏற்றுமதி, 218.36 சதவீதம் உயர்ந்து, 1.66 கோடி டாலரிலிருந்து, 5.31 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 497.39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 160 கோடி ரூபாயிலிருந்து, 957 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போன்று, டாலர் மதிப்பின் அடிப்படையிலான, இவற்றின் ஏற்றுமதி, 469.11 சதவீதம் உயர்ந்து, 3.10 கோடி டாலரிலிருந்து, 17.60 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், முத்துக்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 3.61 கோடி ரூபாயிலிருந்து, 3.42 கோடி ரூபாயாக சற்று குறைந்து உள்ளது. எனினும், செயற்கை கற்கள் ஏற்றுமதி, 12.33 கோடியிலிருந்து, 18.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கச்சா வைரம்:சென்ற ஏப்ரலில், கச்சா வைரம் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 120.38 சதவீதம் உயர்ந்து, 597 கோடி ரூபாயிலிருந்து, 1,316 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. டாலர் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 109.93 சதவீதம் அதிகரித்து, 11.53 கோடி டாலரிலிருந்து, 24.21 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மேலும், அளவின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 22.45 லட்சம் காரட்டிலிருந்து, 43.76 லட்சம் காரட்டாக அதிகரித்து உள்ளது.சென்ற 2012-13ம் முழு நிதிஆண்டில், நாட்டின் ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி, 2.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் ஏற்றுமதியை (2.06 லட்சம் கோடி ரூபாய்) விட, 3.18 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)