பதிவு செய்த நாள்
21 மே2013
01:17

பெங்களூரு,:நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,-மார்ச்), நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, கடந்தாண்டின் இதே காலாண்டை விட, 7.5 சதவீதம் அதிகரித்து, 27.10 லட்சமாக உயர்ந்துள்ளது என, இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டீ.சி.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், "பிராண்டட்' கம்ப்யூட்டர் விற்பனை, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வங்கி, காப்பீடு, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், கம்ப்யூட்டர்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து, இவற்றின் ஒட்டு மொத்த விற்பனை, சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி நிறுவனம், 22.5 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு,முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஏசர் மற்றும் டெல் ஆகிய நிறுவனங்கள், 13.8 சதவீத சந்தை பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன்படி, டெல் நிறுவனம், குறிப்பாக, நோட்புக்ஸ் கம்ப்யூட்டர்களுக்கான விலையை பெரிதும் குறைத்துள்ளது.நிலையான விலை மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை அடுத்து, கம்ப்யூட்டர் விற்பனை மேலும் சூடுபிடிக்க துவங்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, ஐ.டீ.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|