பதிவு செய்த நாள்
21 மே2013
01:20

ஊட்டி, காக்காத் தோப்பில், நீதிமன்ற கட்டுமான பணிகளை மதிப்பிட்டு, அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், 41 லட்சம் ரூபா# செலவில் கட்டப்பட்ட கட்டடம், பயன்படாமல் உள்ளதாக தணிக்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.உத்தரவு:சென்னை, ஐகோர்ட்டின் பரிந்துரை அடிப்படையில், ஊட்டியில் உள்ள காக்காத் தோப்பில், பொதுப்பணித் துறை மூலமாக, நீதிமன்ற கட்டடங்கள் கட்டவும், நீதிமன்ற அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டவும், 7.89 கோடி ரூபாய் அனுமதித்து, அரசு உத்தரவிட்டது.இப்பணி, 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம், 5.51 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு, 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், பணிகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில், நீதிமன்ற கட்டடங்கள், வெகுதூரத்தில் இருப்பதால், வழக்கறிஞர்களும் பொதுமக்களும் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் என, வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்பணியை நிறுத்த அரசு உத்தரவிட்டது.அதன் பின், ஆகஸ்ட் மாதம் பணி மீண்டும் துவக்கப்பட்ட நிலையில், 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மீண்டும் வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் பணி நிறுத்தப்பட்டது. அப்போது, 41 லட்சம் ரூபாய் செலவில், அக்கட்டடத்தின் தரை தளத்தின் கூரை மட்டம் வரை, கான்கிரீட் தூண்கள் எழுப்பப்பட்டிருந்தன.
மறுப்பு:இக்கட்டுமானத்தை பயன்:படுத்தி, 5.39 கோடி ரூபாய் மதிப்பில், 28 அரசு அலுவலகங்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கான பொதுப்பணித் துறையின் பரிந்துரையையும், 2000ம் ஆண்டில் அரசு, நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மறுத்தது.இந்நிலையில், 2009ம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், பாதியில் நிற்கும் நீதிமன்ற கட்டடத்தை முடித்துக் கொடுக்க, பொதுப்பணித் துறையின் தலைமை பொறியாளருக்கு உத்தரவிடுமாறு, அரசை கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, தலைமைப் பொறியாளர், மீதமுள்ள பணிக்கு, 11.80 கோடி ரூபாய்க்கு புதிய மதிப்பீட்டை தயாரித்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம், அரசின் ஒப்புதலை பெற, ஐகோர்ட் பதிவாளருக்கு அனுப்பி வைத்தார்.அதன் பின், மீண்டும், 2010ம் ஆண்டில், 12.42 கோடி ரூபாய்க்கான திருத்திய மதிப்பீட்டை, தயாரித்தார். தொடர்ந்து, இந்த மதிப்பீடு, 2011ம் ஆண்டு அரசிற்கு அனுப்பப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.
இவ்வாறு, மீதமுள்ள பணிகளை முடித்துக் கொடுக்க, கேட்டுக் கொள்ளப்பட்டு, மூன்று ஆண்டுகளாகியும், மதிப்பீட்டை இறுதி செய்வதிலும், நிர்வாக ஒப்புதல் பெறுவதிலும், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.பயன்பாடு:இதனால், மறு மதிப்பீடு மற்றும் திருத்திய மதிப்பீட்டிற்கிடையில், 62 லட்சம் ரூபாய் கூடுதலாக அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, 1999ம் ஆண்டில், 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கோர்ட் கட்டடத்திற்கான கட்டுமானங்கள், பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன.இதுகுறித்து, கடந்தாண்டு ஜூன் மாதம், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என, தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|