பதிவு செய்த நாள்
21 மே2013
01:21

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், இந்தியாவில், நிறுவனங்கள் மேற்கொண்ட இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 166 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது.இதை, கணக்கு தணிக்கை மற்றும் ஆலோசனை நிறுவனமான கிரான்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:சென்ற ஏப்ரல் மாதத்தில், 39 ஒப்பந்தங்கள் மூலம், 166 கோடி டாலர் மதிப்பிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டன.சென்ற ஆண்டின் இதே மாதத்தில், பல்@வறு நிறுவனங்களிடையே, 197 கோடி டாலர் மதிப்பிலான, 60 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருந்தன.மதிப்பீட்டு மாதத்தில், அயல்நாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடையே, 121 கோடி டாலர் அளவிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.உள்நாட்டு நிறுவனங்களிடையே, 49 கோடி டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகள் கையொப்பமாயின. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|