பதிவு செய்த நாள்
21 மே2013
14:06

மிகக் குறைந்த விலையில் நல்ல நிறுவனத்தின் இரண்டு சிம் போன் எதனை வாங்கலாம் என்று ஒரு வாசகர், போனில் தொடர்பு கொண்டு கேட்டார். விற்பனை மையங்களைச் சுற்றி வந்தபோது ஸ்பைஸ் எம் 5200 என் என்ற மொபைல் போன் இந்த வகையில் நம் கவனத்தை ஈர்த்தது. இதன் விலை ரூ.1,399. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு சிம்களை இயக்குகிறது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைலில் வழக்கம் போல எண்களும் எழுத்துக்களும் இணைந்த கீ போர்ட் தரப்பட்டுள்ளது. டி.எப்.டி. டிஸ்பிளே ஸ்கிரீன் 2 அங்குல அகலத்தில் கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர் உள்ளது. 3,5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ மற்றும் எம்பி3, எம்பி4 பிளேயர் தரப்பட்டுள்ளது. இதன் இன்னொரு சிறப்பு, இதில் உள்ள கேமரா. 0.3 எம்பி திறனுடன் கூடிய, ஸூம் வசதி கொண்ட இந்த கேமரா, வீடியோவினையும் இயக்குகிறது. ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி. வசதிகள் கிடைக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் பயன்படுத்தி, மெமரியை 8 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம். டூயல் எல்.இ.டி. டார்ச் லைட் இயங்குகிறது. இதன் பேட்டரி 1800 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 600 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. எட்டு மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது. கருப்பு வண்ணத்தில், கைக்கு அடக்கமாக அழகாக உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|