பதிவு செய்த நாள்
22 மே2013
08:40

குன்னூர் : தேயிலை ஏலத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின், பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்றனர். நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் செய்கிறது. 2015ம் ஆண்டு வரை, 5,000 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதி செய்ய, பாகிஸ்தானுடன், தென்னிந்திய வர்த்தகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில், காஷ்மீர் எல்லையில் நடந்த அசம்பாவித சம்பவத்துக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் உறவில், சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய, பாகிஸ்தான் வர்த்தகர்கள், தயக்கம் காட்டினர். இந்நிலையில், பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், உறவில் புதிய நிலை ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இது, தேயிலை வர்த்தகத்தில், எதிரொலிக்க துவங்கியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், நீண்ட இடைவெளிக்கு பின், பாகிஸ்தான் வர்த்தகர்கள், இரு வாரங்களாக, குன்னூரில் நடக்கும் தேயிலை ஏல விற்பனையில், பங்கேற்று வருகின்றனர். இதனால், தேயிலை விற்பனை, 62 சதவீதத்திலிருந்து, 87 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|