பதிவு செய்த நாள்
22 மே2013
08:41
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 283 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முட்டை விலை, 283 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், முட்டை விலை மூன்று காசுகள் ஏற்றம் கண்டிருப்பது, பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 285, பெங்களூரு, 275, மைசூரு, 283, ஹைதராபாத், 232, மும்பை, 268, விஜயவாடா, 240, கோல்கத்தா, 285, பர்வாலா, 237, டில்லி, 248. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 55 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, கிலோ, 68 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|