பதிவு செய்த நாள்
22 மே2013
10:45

சென்ற மே 15 அன்று, எல்.ஜி. மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து, கூகுளின் நெக்சஸ் 4 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டன. சென்ற ஆண்டு அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
குறைவான தடிமனில், கூடுதலான அதிக வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதில் இணைந்திருப்பதைப் பெருமையாகக் கொள்கிறோம் என எல்.ஜி. அறிவித்துள்ளது. பல்வேறு அதி நவீன வசதிகளை இந்த போன் மக்களுக்கு வழங்குகிறது. தங்கள் வேலையையும் பொழுது போக்கினையும் இணையாகக் கொள்ள இதில் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிபியுடன் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. 3ஜி நெட்வொர்க் இயங்குகிறது. 4.7 அங்குல வண்ணத்திரை 1280 x 768 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே தருகிறது. இதன் மெமரி 16ஜிபி. ராம் மெமரி 2 ஜி.பி. பின்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடன், முன்புறக் கேமரா 1.3 எம்.பி. திறனுடனும் இயங்குகிறது. 2,100 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 15.3 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். இதன் மின் சக்தி 390 மணி நேரம் தங்குகிறது. இதன் பரிமாணம் 133.9x68.7x9.1 மிமீ. எடை 139 கிராம். வயர்லெஸ் சார்ஜிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், யு.எஸ்.பி., என்.எப்.சி., ஜி.பி.எஸ். ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த மொபைல் போனை எல்.ஜி. நிறுவனத்தின் தனி விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். மற்றும் பிற பல பொருள் அங்காடிகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|