பதிவு செய்த நாள்
23 மே2013
00:20
புதுடில்லி:நடப்பு காபி பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற மார்ச் வரையிலான அரையாண்டில், சர்வதேச காபி ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்து, 5.61 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை-60 கிலோ) உயர்ந்துள்ளது.கடந்த 2011-12ம் காபி பருவத்தில், இதே காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 5.24 கோடி மூட்டைகளாக இருந்தது.
இந்தோனேஷியா:வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து, அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டதால், மதிப்பீட்டு காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதியில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என, உலக காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில், நடப்பு காபி பருவத்தில், சென்ற மார்ச் வரை, 1.6 கோடி காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 0.8 சதவீதம் அதிகமாகும்.வியட்னாம், காபி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் காபி ஏற்றுமதி, மதிப்பீட்டு காலத்தில், 9.5 சதவீதம் அதிகரித்து, 1.24 கோடி மூட்டைகளாக உயர்ந்துள்ளது.
ஆப்ரிக்கா:மூன்றாம் இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் காபி ஏற்றுமதி, 71.4 சதவீதம் அதிகரித்து, 52 லட்சம் மூட்டைகளாக உள்ளது. இதே காலத்தில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, சற்றே குறைந்து, 25 லட்சம் மூட்டைகளாக உள்ளது.
ஆப்ரிக்காவின் காபி ஏற்றுமதி, கடந்த 2002-03ம் பருவத்திற்கு பிறகு, மிக உயர்ந்த அளவாக, 30.2 சதவீதம் அதிகரித்து, 54 லட்சம் மூட்டைகளாக உயர்ந்து உள்ளது. உகாண்டா, 16 லட்சம் மூட்டைகளும், எத்தியோப்பியா, 14 லட்சம் காபி மூட்டைகளையும் ஏற்றுமதி செய்துள்ளன.நடப்பு காபி பருவத்தில், சர்வதேச அளவில், 14.47 கோடி காபி மூட்டைகள் உற்பத்தி செய்யப்படும் என, உலக காபி கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|