சிமென்ட் விலை மேலும் குறைய வாய்ப்பு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சிமென்ட் விலை மேலும் குறைய வாய்ப்பு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஸ்கான்டிநேவியன் வடிவமைப்பு வோல்வோ கார்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
10:32

ஸ்வீடன் நாட்டு வாகன உற்பத்தியாளரான வோல்வோ கார் கார்பரேஷன் 1927ஆம் ஆண்டு முதல் கார் உற்பத்தியில் இருந்து வந்துள்ளது. தற்சமயம் வோல்வோ கார் உரிமையை பெற்றுள்ளது. சீனாவின் ஜீஜாங் கீலிஹோல்டிங் க்ரூப் நிறுவனம் கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக தரத்தில் சிறந்த பிரீமியம் கார்களை நம்பகமான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் வோல்வோ தனக்கென ஓர் தனியிடத்தை வாடிக்கையாளர் மத்தியில் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்கு காரணம் கார் உற்பத்தியில் சில முக்கிய கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதே எனலாம். பாதுகாப்பு, சுற்றுச்‹ழலுக்கு இணக்கம், தரம் மற்றும் வடிவமைப்பில் இந்நிறுவனம் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை.
வோல்வோ கார்களில் எஸ்யுவிக்கள் ஸ்டேஷன் வேகன்கள், செடான்கள், காம்பாக்ட் எக்ஸிகியூடிவ் செடான்கள் மற்றும் கூப்பேக்கள் வடிவமைக்கப்படுகின்றன. உலகெங்கிலும் இந்நிறுவனத்திற்கு 2300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 4.5லட்சம் வாகனங்களை உலகெங்கும் விற்பனை செய்துள்ளது. வோல்வோ இந்தியாவில் தன் விற்பனையை துவங்கியுள்ள வோல்வோ 2020 ஆண்டிற்குள் பிரீமியம் கார் செக்மன்ட்டின் முன்னோடியாக இந்தியாவில் திகழ வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத், கொச்சி, கோயம்பத்தூர், சென்னை மற்றும் சண்டீகரில் தன் டீலர்ஷிப்பை வோல்வோ நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் வோல்வோ 4கார் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை வோல்வோ S60, வோல்வோ S80, வோல்வோ XC60 மற்றும் வோல்வோ XC90 ஆகும். இதில் குறைந்தபட்ச விலையாக 25 லட்சத்தில் (S60) தொடங்குகிறது.
வோல்வோ கார்களின் ஸ்கான்டிநேவியன் டிசைன் கலையும் தொழில்நுட்பமும் ஒருங்கே கலந்த கலவையாகும். தன் முதல் காரான P1800 முதல் இன்றைய மாடல்கள் வரை எளிமையான நளினமான அழகு இதன் தோற்றத்தில் தெரிகிறது. சுலபமாய் புரிந்து கொண்டு உபயோகிக்கும் வகையில் எளிமையாக தோழமையாக உள்ளது. இதன் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் வளைவுகளும் கோணங்களும் கொண்ட வெளிப்புற தோற்றம், சுலபமாய் உபயோகிக்கக் கூடிய உட்புற சாதனங்கள் (கியர் ஷிப்ட் நாப் போன்றவை), மேற்கூரை, பூட் போன்றவை சுலபமாய் திறந்து மூடக்கூடிய வடிவமைப்பு, தெளிவாய் விஷயங்களை தெரிவிக்கும் எளிமையான ஸ்பீடா மீட்டர் டேகோமீட்டர் மற்றும் ஒரே பொத்தானில் பலவித உபயோகங்கள் கொண்ட கன்சோல் போன்றவை இதன் எளிமையும் அழகும் சேர்ந்த வடிவமைப்பிற்கான உதாரணங்கள்.
பாதுகாப்பு அம்சங்களுக்கு இக்கார்களில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மனித உடலின் அளவு மற்றும் எடைக்கு ஏற்ப வசதியாகவும் சொகுசாகவும் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய சீட்கள், பெடல்கள், சாலையை கண்காணிக்க உதவும் சாதனங்கள் என்று அனைத்தும் சிறப்பாக உள்ளது. வோல்வோவின் சில கான்செப்ட் கார்களில் இன்பராரெட் ஆ சென்சார் நம் கண்பார்வைக்கு ஏற்ப தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய சீட், மிர்ரர் பெடல் போன்றவைகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வோல்வோ கார்களில் உள்ள சொகுசு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும், உபயோகிக்க சுலபமாகவும் உயர்தரமாகவும் இருப்பதால் இக்காருக்கான விலையும் மிகவும் நியாயமானதாகவே தோன்றுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)