பதிவு செய்த நாள்
27 மே2013
00:35

மும்பை:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டை விட, 1 சதவீதம்அதிகரிக்கும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதார மந்தநிலை விரைவில் மாறும். இவ்வாரத்தில், சென்ற நிதியாண்டிற்கான, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இறுதி புள்ளி விவரம் வெளிவர உள்ளது. இது, 5 சதவீதமாக இருக்கும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற நிதியாண்டின், கடைசி மூன்று காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.1 சதவீதமாக இருந்தது.
பொருளாதார வளர்ச்சி குறைந்ததால், வர்த்தகமும் குறைந்தது. ஆனால், நடப்பாண்டு, பொருளாதார வளர்ச்சி, 1 சதவீதம் கூடும் என, நான் எதிர்பார்க்கிறேன். நாம், இலக்கு அளவான, 8 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 - 6.7 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|