பதிவு செய்த நாள்
27 மே2013
16:54

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று(மே 27ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பங்குகளின் விலை ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 326.44 புள்ளிகள் உயர்ந்து 20,030.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 6,083.15 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 27 பங்குகள் விலை நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், சன்பார்மா, இன்போசிஸ், கோல் இந்தியா, பெல், எச்.டி.எப்.சி, ஹிந்தால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், ஜிந்தால் ஸ்டீல், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|