நெல் வரத்து குறைவால் உயருது அரிசி விலைநெல் வரத்து குறைவால் உயருது அரிசி விலை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72  குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
2020 ஆம் ஆண்டில் 5ஜி தகவல் பாதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
15:17

இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது. இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும். இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)