பதிவு செய்த நாள்
29 மே2013
01:08

புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், 45 தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்ததன் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 15,996 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 2,163 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு மேற்கொண்டதன் மூலம், திரட்டப்பட்ட தொகை, ஏழு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' அதன் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், 59 ஒதுக்கீடுகள் மூலம், இந்திய நிறுவனங்கள், இவ்வகையில் திரட்டிய தொகை, மிகவும் அதிகளவாக, 25,850 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.எனினும்,சென்ற நிதியாண்டில், மூலதனச் சந்தை சிறப்பாக இருந்ததையடுத்து, தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்து திரட்டப்பட்ட தொகை நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012ம் ஆண்டு அக்டோபரில், தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடு மூலம், ஒரு நிறுவனம் கூட, நிதி திரட்டிக் கொள்ளவில்லை.அதேசமயம், இவ்வகையில், நடப்பாண்டு பிப்ரவரியில், 5,676 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|