பதிவு செய்த நாள்
30 மே2013
01:30

சென்னை: குறுந்தொழில் புரிவோருக்கு, நுண்கடன் நிறுவனங்களின் மூலம் நிதியுதவி வழங்குவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மேலும் நுண்கடன் நிறுவனங் களின் எண்ணிக்கையிலும், தமிழகம் முதலிடத்தை பிடித்து உள்ளது.
எழுச்சி
பல்வேறுசட்டச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த, நுண் கடன் துறை, மீண்டும் எழுச்சி பெறத் துவங்கியுள்ளது.சென்ற நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், நுண் கடன் நிறுவனங்கள் வழங்கிய மொத்த கடன், 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக, ஆந்திராவில், இந்நிறுவனங்கள் வழங்கிய கடன், 7 சதவீதம் என்ற அளவிலும், இதர மாநிலங்களில், 39 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது என, மைக்ரோபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் நெட்வொர்க் அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நுண்கடன் நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, 14 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது. இந்நிலையில், சென்ற ஆண்டில், இந்நிறுவனங்கள், கடன் வளர்ச்சி, 23 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.கிராமப்புறம் மற்றும் அடித்தட்டு மக்கள், நுண் கடன் நிறுவனங்களில், கடன் வாங்குவது அதிகரித்துள்ளது.குறிப்பாக, மேற்குவங்கம், தமிழகம், கேரளா, பீகார், அசாம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், நுண்கடன் நிறுவனங்களிடம் நிதியுதவி பெறுவது அதிகரித்துள்ளது. அதேசமயம், ஆந்திராவில், நுண்கடன் நிறுவனங்களின், கடன் வளர்ச்சி முன்பு இருந்ததை விட, குறைந்து போயுள்ளது. நுண்கடன் நிறுவனங்களின் எண்ணிக்கையில், தமிழகத்திற்கு அடுத்த இடங்களில், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகா, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பங்களிப்பு
இந்நிறுவனங்கள் வழங்கிய ஒட்டு மொத்த கடனில், ஆந்திரா, மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு மட்டும், 64 சதவீதம் என்ற அளவில் உள்ளது.குறிப்பாக, தமிழகத்தில் தான், அதிகளவில் நுண் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்ற நிதியாண்டில், மார்ச் வரையிலுமாக, நுண்கடன் நிதி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டு மொத்த கடன், 10,203 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 79 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|