பதிவு செய்த நாள்
30 மே2013
01:33

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்று மிகவும் மந்தமாக இருந்தது. மாதாந்திர பங்கு முன் ஒப்பந்த காலம் முடிவடைய உள்ளது மற்றும் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அறிக்கை குறித்த எதிர்பார்ப்பால், இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சற்று சரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், ஆரோக்கிய பாரமரிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. அதேசமயம், வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 13.18 புள்ளிகள் சரிவடைந்து, 20,147.64 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,216.49 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,044.74 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஸ்டெர்லைட் இந்தியா, டாடா ஸ்டீல், கெயில் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 6.95 புள்ளிகள் குறைந்து, 6,104.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,125.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,069.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|