பதிவு செய்த நாள்
31 மே2013
00:23

மும்பை: மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடம் கூடுதல் பிரிமியம் வ‹லிக்க, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பாலிசிதாரர்களிடமிருந்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஏற்கனவே, 15 சதவீதம் கூடுதலாக பிரிமிய தொகையை வசூலித்து வருகின்றன. இந்நிலையில், மருத்துவ காப்பீடு வழங்கும், பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும், புகை பழக்கம் உள்ள பாலிசிதாரர்களிடமிருந்து, கூடுதலாக பிரிமியம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன.அதிகரித்து வரும் மருத்துவ செலவு, காப்பீட்டு தொகைக்கான @காரிக்கை போன்றவற்றால், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.இதன் காரணமாக, இந்நிறுவனங்கள், நடப்பாண்டில் காப்பீட்டு பிரிமியத்தை, 15 முதல் 20 சதவீதம் வரை, உயர்த்தியுள்ளன.'முன்பு மருத்துவ காப்பீட்டிற்கான ஒப்பந்த காலம் ஓராண்டாக இருந்தது. தற்போது, ஆயுள் முழுவதும், காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காப்பீட்டுதாரர்களின் புகை பழக்கம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளது' என, பியூச்சர் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி ராவ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|