பதிவு செய்த நாள்
31 மே2013
00:24

புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 450 கோடி டாலராக (24,750 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 500 கோடி டாலராக (27,500 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.,) தெரிவித்து உள்ளது.பொருளாதார சுணக்க நிலை காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்து போயுள்ளன. இதையடுத்தே, நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2012-13ம் நிதிஆண்டில், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, இதற்கு முந்தைய நிதிஆண்டை காட்டிலும், 3 சதவீதம் குறைந்து, 5,670 கோடி டாலராக (3.12 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.எனவே, வரும் மாதங்களில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இ.இ.பி.சி., வலியுறுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|