தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.605 கோடி உயர்வு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.605 கோடி உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மோட்டார் வாகன விற்பனையில் சுணக்க நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:59

புதுடில்லி:சென்ற மே மாதத்தில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை@யற்றம், வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு, நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை போன்றவற்றால், கார் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது."எனினும், வரும் மாதங்களில், பெட்ரோல் கார்களுக்கான தேவை, மேலும் சூடுபிடிக்கும்' என, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ராகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி:நாட்டின் கார் தயாரிப்பில், மிகப் பெரிய நிறுவனமான மாருதி சுசூகி, நடப்பாண்டு மே மாதத்தில், 84,677 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 98,884 ஆக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 14.4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக, சென்ற மே மாதத்தில், இந்நிறுவனம், உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை, 77,821 ஆக சரிவடைந்துள்ளது.

இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (89,478 கார்கள்) விட, 13 சதவீதம் குறைவாகும்.மேலும், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 27.1 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,406 என்ற எண்ணிக்கையிலிருந்து, 6,856 ஆக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை, 8.3 சதவீதம் சரிவடைந்து, 72,309லிருந்து, 66,342 ஆக குறைந்துள்ளது.டி.வி.எஸ். மோட்டார்:டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சென்ற மே மாதத்தில், 1,65,151 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,76,012 ஆக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 6.17 சதவீதம் சரிவடைந்து உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு சந்தைகளில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 1,51,980 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,46,046 ஆக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், சென்ற மே மாதத்தில், இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 3.85 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,134 என்ற எண்ணிக்கையிலிருந்து, 66,606 ஆக உயர்ந்து உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின், ஸ்கூட்டர் விற்பனை, 38,833 லிருந்து, 33,747 ஆக குறைந்துள்ளது.
சென்ற மே மாதத்தில், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 98.8 சதவீதம் அதிகரித்து, 2,920 லிருந்து, 5,805 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22,817 என்ற எண்ணிக்கையிலிருந்து, 24,393 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 21,112 என்ற எண்ணிக்கையிலிருந்து, 19,290 ஆக சரிவடைந்து உள்ளது.

மகிந்திரா:சென்ற மே மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின், வாகன விற்பனை, 1.2 சதவீதம் சரிவடைந்து, 43,460 ஆக குறைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 43,989 ஆக உயர்ந்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 5.4 சதவீதம் அதிகரித்து, 39,938லிருந்து, 42,104 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை, 12 சதவீதம் அதிகரித்து, 14,848 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், மூன்று சக்கர வாகன விற்பனை, 7 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4,320 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,028 ஆக குறைந்துள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 67 சதவீதம் சரிவடைந்து, 4,051லிருந்து, 1,356 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.ரெனோ:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ, இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை, சென்ற மே மாதத்தில், 13 மடங்கு அதிகரித்து, 6,013 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 438 ஆக இருந்தது.

ஹூண்டாய்:கார் தயாரிப்பில், இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார், சென்ற மே மாதத்தில், 56,856 கார்களை விற்பனை செய்து உள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (55,669 கார்கள்) விட, 2.1 சதவீதம் அதிகமாகும்.அதேசமயம், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 0.3 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டு, 32,010 என்ற எண்ணிக்கையிலிருந்து, 32,102 ஆக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23,659 லிருந்து, 24,754 ஆக அதிகரித்துள்ளது.

யமஹா:இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற மே மாதத்தில்,49,460 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 36,956 ஆக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.உள்நாட்டு சந்தைகளில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 30 சதவீதம் அதிகரித்து, 26,287 என்ற எண்ணிக்கையில்இருந்து, 34,104 ஆக உயர்ந்து உள்ளது.இதே போன்று, இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10,669 லிருந்து, 15,356 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)