பதிவு செய்த நாள்
02 ஜூன்2013
01:09
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு 200, பாமாயில் டின்னுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு 3,215, கடலை எண்ணெய் 15 கிலோ டின் 1,750, நல்லெண்ணெய் 2,700, சூரியகாந்தி எண்ணெய் 1,410, நிலக்கடலை பருப்பு மூடைக்கு 5,000, கடலை புண்ணாக்கு 3,700, உளுந்து மூடைக்கு 4,100, பர்மா உளுந்து 3,900, பொடி உளுந்து 3,800, உளுந்தம் பருப்பு 6,100, பர்மா உளுந்தம் பருப்பு 5,100, பொடி உளுந்தம் பருப்பு 4,800, துவரை நாடு 4,800, பொடித் துவரை 4,000, துவரம் பருப்பு 6,700, பொடி துவரம் பருப்பு 5,900, பாசிப்பயறு நாடு 5,100, பொடிப்பயறு 5,000, பாசிப் பருப்பு 7,000, பொடிப் பாசிப் பருப்பு 6,700, கொண்டைக் கடலை 3,800, பொரி கடலை 2,870, மைதா 2,970, ரவை 2,970 ரூபாயாக உள்ளது.பாமாயில் 865லிருந்து 880, மிளகாய் புதுவத்தல் குவிண்டாலுக்கு 5,600 லிருந்து 5,800, சுமார் ரகம் 5,000 லிருந்து 5,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய்வத்தல் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்களாக, பருப்பு விற்பனை இல்லாததால், இதன் விலை நிலையாக இருப்பதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|