பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:37
சென்னை:கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து உள்ளது.சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,542 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,336 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 2,552 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 20,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 105 ரூபாய் உயர்ந்து, 27,290 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 47.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,405 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆக, கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாயும், சவரனுக்கு, 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|