பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
09:58
மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஜூன் 6ம் தேதி, வியாழக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கின்றன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 136.61 புள்ளிகள் சரிந்து, 19,431.61 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 45.25 புள்ளிகள் சரிந்து 5,878.60 எனும் அளவிலும் துவங்கியுள்ளன. அமெரிக்க பங்குசந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவு, லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் தொடர் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தை தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங் சேங் 0.88 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.45 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|